Aadi Offer| ரூ.1000 புடவை வெறும் ரூ.200 தான்.. முதலில் வரும் 300 பேருக்கே ஆடி ஆஃபர்

ரூ.1000 புடவை வெறும் ரூ.200 தான்.. முதலில் வரும் 300 பேருக்கே ஆடி ஆஃபர்

Aadi Offer| ரூ.1000 புடவை வெறும் ரூ.200 தான்.. முதலில் வரும் 300 பேருக்கே ஆடி ஆஃபர்

#aadioffer #sareeoffer

விருத்தாச்சலம் துணிக்கடையில் ஆடித் தள்ளுபடி - முண்டியடித்த பொதுமக்கள் விருத்தாச்சலத்தில், ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவை வெறும் 200 ரூபாய்க்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, துணிக்கடையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பாலக்கரை பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில், முதலில் வரும் 300 பேருக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புடவை 200 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள், கடை திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று, மக்கள் ஆர்வத்துடன் புடவைகளை வாங்கிச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com