ரயிலில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா- போலீசார் அதிரடி

x

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில், ஒரூ கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை அருகே அம்மூர் ரயில் நிலையத்தில், ரோந்து பணியில் இருந்த போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

ரகசிய ரோந்து மூலம் பக்காவாக பிளான் போட்டு தூக்கிய போலீஸ்.

1 கோடி மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது.

ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மூர் ரயில் நிலையத்தில் ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்த போலீசார் ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1 கோடி மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில் தொடர்ச்சியாக பிறமாநிலங்களிலிருந்து மர்மகும்பல் ரயிலில் கஞ்சா கடத்தி செல்வதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த கும்பலை பிடிக்க எஸ்.பி.உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது போலீசார் சேகரித்த தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் அம்மூர் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் இருந்து சந்தேகப்படும்படி மூட்டைகளுடன் கீழே இறங்கி வந்த இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இளைஞர்கள் மூவரும் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சுரேஷ் (எ) தேவன்(29), மலப்புரத்தை சேர்ந்த சுனில்குமார்(22) என்பதும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்ததோடு, அவர்கள் எடுத்து வந்த 1 கோடி மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த தனிப்படை மூலம் கடந்த 5 மாதங்களில் 619 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்