

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது. இதனால், சானமாவு, பீர்ஜேப்பள்ளி, போடூர், ஆழியாளம், உள்ளிட்ட வனக் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுயானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் தனியாக நடந்து செல்ல கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.