வாடகைக்கு இருந்த 10 பேர்... வீதியில் கட்டி உருண்ட இரு குடும்பங்கள் - சென்னையில் பரபரப்பு
சென்னை விருகம்பாக்கத்தில், வீட்டை மறித்து வாகனங்கள் நிறுத்துவதை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டு மாறிமாறி தாக்கிக்கொள்ளும் காட்சி வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி தெருவில் அய்யாதுரை என்பவர், அவரது வீட்டு மாடியில்10 பேரை வாடகைக்கு வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், அருகில் அனுராதா என்பவரது வீடு உட்பட மற்ற வீட்டினரால் வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டாக கூறப்படுகிறது. கடந்த மூன்றாம் தேதி, இதை கண்டித்து கேட்டதால் அனுராதாவையும், அவரது குடும்பத்தாரையும், அய்யாதுரை குடும்பத்தோடு தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
காயமடைந்த அனுராதாவும், அவரது கணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அனுராதா வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமாதானமாக போகாவிட்டால் பாதிக்கப்பட்ட தங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆய்வாளர் மிரட்டுவதாகவும் அனுராதா குற்றம் சாட்டியுள்ளார். தங்களது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.