Hosur | குப்பையில் போன 10 பவுன் தங்கம்... 3 மணி நேரத்தில் மீட்ட தூய்மைப் பணியாளர்கள்

குப்பையில் போன 10 பவுன் தங்கம்... 3 மணி நேரத்தில் மீட்ட தூய்மைப் பணியாளர்கள்

Hosur | குப்பையில் போன 10 பவுன் தங்கம்... 3 மணி நேரத்தில் மீட்ட தூய்மைப் பணியாளர்கள்

ஓசூரில் குப்பையில் தவறுதலாக வீசப்பட்ட 10 பவுன் தங்க நகை, 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி 17-வது வார்டைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டுக் குப்பையுடன் தங்க நகை இருந்த பையையும் தவறுதலாக தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெண், மாமன்ற உறுப்பினர் நாகராஜிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 3 மணி நேரம் தேடுதல் நடத்தி, நகைப் பையை மீட்டனர். பின்னர் மாமன்ற உறுப்பினர் நாகராஜ், நகையைப் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

X