சென்னையில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த பாஜக பிரமுகரை அரிவாளால் வெட்டிய 10 பேர்
சென்னை போரூர் அருகே பா.ஜ.க பிரமுகர் உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மண்டல தலைவர் பிரசாந்த், தனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஆட்டோ மற்றும் பைக்கில் அதிரடியாக வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல், மூவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. காயம் அடைந்த மூவரும் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வானகரம் போலீசார், தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்கும் கும்பல் பா.ஜ.க பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
