திருவொற்றியூர் அடுத்த சின்ன எர்ணாவூர் பகுதியில் வசித்துவரும் ரவி கார்த்திக் மனைவி சந்தியாவின் வளைகாப்பு விழா திருமண மண்டபத்தில் நடத்துவதற்காக இருந்தது. இந்நிலையில் 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா நோய் பாதுகாப்பு கருதி வளைகாப்பு விழா வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.