இறந்த மாட்டின் வயிற்றிலிருந்து 10 kg பிளாஸ்டிக் பைகள் மீட்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விபத்தில் உயிரிழந்த ஒருகோயில் மாட்டின் வயிற்றிற்குள் 10 கிலோவிற்கும் மேல் பிளாஸ்டிக் பைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, சாலையில் அதிவேகமாக சென்ற ஒரு வாகனம் மோதிய விபத்தில் இந்த மாடு உயிரிழந்தது. இதை அடுத்து, பிரேத பரிசோதனை செய்தபோது, மாட்டின் வயிற்றில் இருந்து 10 கிலோவிற்கும் அதிகமாக சிமெண்ட் சாக்குகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது. இந்த சூழலில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கோசாலையில் விட்டு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
