மின்வயர் அறுந்து 10 மாடுகள் உயிரிழப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்வயர் அறுந்து விழுந்து, பத்து மாடுகள் மற்றும் ஒரு காட்டுப்பன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பேர் கண்டிகை மற்றும் சிறுபேர் பாண்டி கிராமத்தில் வீரப்பன், சுரேஷ், ஜெயராமன் உள்ளிட்ட நான்கு விவசாயிகளின் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. அப்போது மின்கம்பம் உடைந்து, மின்வயர்கள் அறுந்து கிடந்த நிலையில், பத்து மாடுகள் மற்றும் ஒரு காட்டுப்பன்றி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. பழுதான மின்கம்பம் குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்