"கவுன்சிலர்களுக்கு 10% கமிஷன்.." - "நீயா, நானா..?" மேயர் முன்னிலையிலேயே வாக்குவாதம்...

x

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில், யார் முதலில் பேசுவது என்று திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட போட்டியால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தங்கள் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவதில் திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போட்டி போட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதைத் தொரடர்ந்து, மாநகராட்சி கவுன்சிலர்கள் 10 சதவீத கமிஷன் கேட்பதாக பொதுவெளியில் பேசிய ஒப்பந்ததாரர் குறித்த தீர்மானத்துக்கு உறுப்பினர்கள், எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்