தனித் தேர்வர்களுக்கு முதல் முறையாக தனி மையங்கள் : தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு

10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தனித் தேர்வர்களுக்கு முதல் முறையாக தனி மையங்கள் : தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு
Published on

10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு , முதல் முறையாக புதிய பாடத்திட்ட அடிப்படையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது . எனவே இந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. பழைய பாடத்திட்ட முறையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பழைய பாடத்திட்ட அடிப்படையில் கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது . வினாத்தாள் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு , புதிய நடைமுறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com