மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.08.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை....
  • நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்...குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..
  • இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிப்புமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவதாக அறிவித்தார் மல்லிகார்ஜூனா கார்கே
  • டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தனது பயணம் குறித்த அனுபவங்களை பகிர்ந்தார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா...இந்தியாவின் ககன்யான் திட்டம் குறித்து உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் எழுந்துள்ளதாக சுபான்ஷு பெருமிதம்...
  • காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம்..
  • சென்னையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம்...போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் வலுகட்டாயமாக கைது...
  • கோயம்பேடு-பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய் ஒதுக்கீடுநிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கியது தமிழக அரசு...
  • கடந்த 10 ஆண்டுகளில் 200 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்...2025-26ல் மட்டும் சுமார் 15.69 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதாக விளக்கம்...

Next Story

மேலும் செய்திகள்