மூச்சுக்குழாயில் சிக்கிய ரூ.1, ரூ.2 நாணயங்கள் - கதிகலங்கி குழந்தையை தூக்கி ஓடிய பெற்றோர்
2 நாணயங்களை விழுங்கிய மாணவி- அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
திருப்பத்தூரில் 2-ஆம் வகுப்பு மாணவியின் தொண்டையில் சிக்கிய நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். திருப்பத்தூர் கோட்டை தெருவை சேர்ந்த தில்ஷாத் மகள் நிஸ்பா, ஒன்று மற்றும் 2 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடியபோது அதை விழுங்கினார். உடனடியாக பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். சில்லரை காசு உணவு குழாயில் சிக்கியது எக்ஸ்ரே மூலம் தெரியவந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
Next Story
