வீட்டின் கழிவறைத் தொட்டியில் 70 பாம்புகள்... உறைய வைக்கும் அதிர்ச்சி காட்சி

x

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் விரேந்திரா குப்தா என்பவர் தனது வீட்டின் கழிவறை தொட்டியை சுத்தம் செய்வதற்காக திறந்துள்ளார். அப்போது, தொட்டியில் ஏராளமான பாம்புகள் மற்றும் பாம்பு குட்டிகள் பின்னிப் பிணைந்தவாறு இருந்ததை கண்டு, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் பாம்புகளை பிடித்தனர். சுமார் 70க்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினர் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்