இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (24-07-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
பல வருட கடின உழைப்புக்குப் பின், விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததுள்ளதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி...
பிரிட்டன் உடனான புதிய ஒப்பந்தம், இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை...
இந்தியா - இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து...
லண்டனில் பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் ஒப்பந்தம்...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை...
இதயத்துடிப்பில் வேறுபாடு காரணமாக முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது கண்டுபிடிப்பு என விளக்கம்...
நாடாளுமன்ற வளாகத்தில் 3வது நாளாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்...
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கண்டனம்...
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 14 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு...
சிபிஐயிடம், எஸ்.பி.ஐ. வங்கி புகார் அளிக்க உள்ளதாக தகவல்....
மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 12 பேர்
விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை...
மகாராஷ்டிரா அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்தது...
ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை...
2018ஆம் ஆண்டு, கள்ளக்காதலுக்காக மகன், மகளை கொலை செய்த வழக்கில் 'பிரியாணி' அபிராமி குற்றவாளி...
அபிராமிக்கும், அவரது ஆண் நண்பருக்கும், சாகும் வரை சிறை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு...
