தொட்டு தொடரும் பாரம்பரியம்... இயக்குநர் - நடிகை.. முடிவில்லா காதல் கதை - அடுத்து வரும் புதிய ஜோடி?

தமிழ் சினிமாவில் இயக்குநர் - நடிகை திருமண பந்தத்தில் புதிய வரவாக இணைய உள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. சினிமா மூலம் நிஜவாழ்க்கையிலும் ஜோடியான இயக்குநர் - நடிகை ஜோடிகள்
x

தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினுக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆவது போன்று, நிஜ வாழ்க்கையில் இயக்குநர் - கதாநாயகி

கெமிஸ்ட்ரி என்பது தமிழ் சினிமாவின் தொடர்கதை...

1982ம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் இயக்குநர், நடிகர் பாக்கியராஜ்ஜிற்கும் - கதாநாயகி பூர்ணிமாவிற்கும் இடையே காதல் மலர, இல்லற வாழ்க்கையில் புகுந்தனர்..

ஒருதலை ராகம் படம் ரசிகர்கள் மனதை வென்றெடுக்க, அதன் படைப்பாளியான டி. ராஜேந்தர், படத்தில் நடித்த உஷாவை மணமுடித்தார். இதன் நீட்சி உயிருள்ளவரை உஷா...

1992ம் ஆண்டு செம்பருத்தி என்ற படத்தில் ரோஜாவை அறிமுகம் செய்தார் ஆர்.கே. செல்வமணி... அன்று தொடங்கிய பந்தம் இருவரையும் திருமண வாழ்க்கையில் இணைத்தது

மணிரத்னம் - நடிகை சுஹாசினி தம்பதி ஸ்டைல் வேறு... மணிரத்னத்தின் உதவி இயக்குநராக சுஹாசினி பணியாற்றியதில் இருந்து தொடங்குகிறது இவர்களது ஸ்டோரி..இதேபோல பொன்வண்ணன் உதவி இயக்குநராகவும், நடிகராகவும் இருந்த காலக்கட்டத்திலேயே சரண்யாவை காதலித்து மணமுடித்தார்.

இந்த வரிசையில் மற்றொரு நட்சத்திர ஜோடி சுந்தர் சி - குஷ்பு. உச்ச நட்சத்திரமாக குஷ்பு இருந்த காலகட்டத்தில் முறைமாமன் படம் வெளியானது. அதுவே படத்தின் இயக்குநர் சுந்தர் சியும், குஷ்பும் இணைய பாலமானது.

தேவயானி - ராஜகுமாரன் ஜோடி இணைவதற்கு ஆரம்பப்புள்ளி நீ வருவாய் என...பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனும் - தெலுங்கு பட இயக்குநர் கிருஷ்ணா வம்சியை மணமுடித்தார்.அதிரடி ஆக்‌ஷன் இயக்குநரான ஹரி விஜயகுமாரின் மகளும் நடிகையுமான பீரித்தாவை காதலித்து மணமுடித்தார்.காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியனின் குடும்ப காதல் கதை ஷெப்ஷல்... அவரது மூன்று மகள்களும் பிரபலங்களுமான கனி, விஜயலட்சுமி, நிரஞ்சனி ஆகியோர் சினிமா இயக்குநரைதான் மணமுடித்தனர்.

இப்படி, கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இயக்குநர் - நடிகை திருமண ஜோடி ஏராளம்..அந்த வரிசையில் புதிய ஜோடியாகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன்.


Next Story

மேலும் செய்திகள்