ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் கைது

x

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லி போலீசார், ஜார்க்கண்ட் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராஞ்சி போலீசார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், ஐ.எஸ். பயங்கரவாதி என கருதப்படும் ஆஷர் டேனிஷ் சிக்கினார். இதேபோல நாடு தழுவிய சோதனைகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்