டெஸ்ட் கிரிக்கெட்டில் 586 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 586 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே சாதனை
x

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரை அடித்து ஜிம்பாப்வே அணி சாதனை படைத்துள்ளது. புலவாயோவில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதுவே டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வே ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ரன்களாகும். ஜிம்பாப்வே அணியில் சீன் வில்லியம்ஸ், க்ரேக் எர்வின், பிரைன் பென்னட் ஆகிய மூவரும் சதங்கள் விளாசி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 491 ரன்கள் பின்தங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்