ஒரே ஓவரில் 39 ரன்கள் - யுவராஜ் சாதனை முறியடிப்பு...

ஒரே ஓவரில் 39 ரன்கள் - யுவராஜ் சாதனை முறியடிப்பு...
Published on

சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 39 ரன்கள் அடித்து சமோவா வீரர் டேரியஸ் விசர் புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் சமோவா மற்றும் வனுவாட்டு அணிகள் மோதின. ஆட்டத்தின் 15வது ஓவரில், சமோவா வீரர் டேரியஸ் விசர் ஆறு சிக்சர்களைப் பறக்கவிட்டார். நோபால் மூலம் மூன்று ரன்கள் வர, மொத்தமாக 39 ரன்கள் அடிக்கப்பட்டது. இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்த யுவராஜ் சிங், பொலார்டு உள்ளிட்டோரின் சாதனையை சமோவா வீரர் முறியடித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com