இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா ஹாட்ரிக் வெற்றி
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மலேசியாவை 315 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலம் இந்திய அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதல் இரண்டு லீப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதியை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட இந்திய அணி மூன்றாவது மற்றும் கடைசி லீக்கில் மலேசியாவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்கள் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்திருந்தது. இதில் 209 ரன்கள் விளாசி, இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அபிக்யான் குண்டு படைத்திருந்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த மலேசியா அணி 32.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே பெற்றது. இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
Next Story
