குத்துச்சண்டை பயிற்சி பெறும் இளைஞர்கள் : பயிற்சி உபகரணங்கள் வழங்க அரசுக்கு கோரிக்கை

புதுக்கோட்டையில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் இளைஞர்கள், அதற்காக உபகரணங்களை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக கிராமப்புற இளைஞர்களுக்கு இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர். மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் நடைபெறும் பயிற்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

குத்துச்சண்டை மட்டுமின்றி புல்லப்பஸ், தண்டால், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தாங்கள் சேமித்து வைக்கும் பாக்கெட் மணியில் குத்துச்சண்டை பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதாக கூறும் இளைஞர்கள், போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்போம் என்றும் தெரிவிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com