

அர்ஜென்டினாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் ஆடவர் பிரிவில் ரஷ்யாவை சேர்ந்த BUMBLEBEE, மகளிர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த RAM தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. நடனத்தை விளையாட்டாக அங்கீகரித்து இளையோர் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக நடன கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்தப் போட்டியை எப்படி வெற்றி , தோல்வியை நிர்ணயிக்கிறார்கள் தெரியுமா?? நம்ம ஊரில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவர்கள் மார்க் போடுவார்களே அதே மாதிரி தான்..
கலைஞர்களின் நடன நலினம், இசை, புதுமை, உள்ளிட்டவைகளை வைத்து நடுவர்கள் மதிப்பெண் வழங்குகின்றனர். இது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டால் நிச்சயம் இந்தியா BREAK DANCE ல் தங்கம் வெல்லும் என்பதில் ச்ந்தேகமில்லை..