``என்னையவா ஏலத்துல எடுக்கல’’ - சொல்லி சொல்லி அடிக்கும் கான்வே
2026 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாத நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 தொடக்கப் போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். MI கேப் டவுன் அணிக்கு எதிராக, டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய கான்வே, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டாலும், தனது பேட்டிங் திறமையால் கான்வே மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Next Story
