

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டி ஃபின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 400 மீட்டர் தடகள போட்டியின் அரையிறுதியில் களமிறங்கிய, இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் பந்தய தூரத்தை 52.10 விநாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் ஹிமா தாஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனால் அவர் பதக்கம் வெல்வாரா என்ற
எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.