

உலக கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியின் 23 வது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட வெஸ்ட் இன்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்க தேசம் முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணியில் அதிகபட்சமாக, பூரான் 40 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 39 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில் மெகதி ஹாசன், முஸ்டாபிசுர், ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இன்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்து, மிகவும் பொறுமையாக ஆடியது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் லிடோன் தாஸ் மட்டும் 44 ரன்கள் எடுத்தார். . 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம், 139 ரன்களே எடுத்தது. இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், 9 ரன்கள் மட்டுமே எடுத்த வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிகோலஸ் பூரான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.