

உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவில் நடைபெற்ற இந்த தொடரில் புதிய கபடி சம்மேளனத்தை சேர்ந்த இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இறுதி போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி 57 க்கு 27 என்ற புள்ளிகள் கணக்கில் ஈராக்கையும், பெண்கள் பிரிவில் இந்திய அணி 47 க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில் தைவானையும் வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதனையடுத்து மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.