இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..?

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற கடைசி ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா ஒருநாள் தொடரை 2க்கு3 என்ற கணக்கில் இழந்தது. உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ள இந்திய அணியை தேர்வு செய்ய, இந்த தொடர் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராயுடு, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் சொதப்பியது இந்திய அணிக்கு தலைவழியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியில் 4வது வீரராக களமிறங்க போவது யார்? , தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக யார் இடம்பெற போகிறார் என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே இந்திய அணி உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கும் முன்பும், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பும் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. இதனால் இம்முறையும் இழந்ததால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com