உலகக்கோப்பை கால்பந்து - ஸ்காட்லாந்து, ஹைத்தி, குரோசா சாதனை

x

28 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்காட்லாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வாகி புது சாதனை படைத்திருந்த நிலையில், கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் தேர்வாகிய மிக சிறிய நாடு என்ற பெருமையை குரோசோ தீவு பெற்றுள்ளது. வெறும் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் மட்டுமே வாழும் கரீபியன் நாடுகளில் ஒன்றான இந்த நாடு ஜமைக்கா உடனான போட்டியை சமனில் முடித்ததன் மூலம் உலக கோப்பைக்கு தேர்வாகியுள்ளது. இதேபோல 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஹைத்தி நாடு நிகராகுவா அணிக்கு எதிரான போட்டியில் 2க்கு 0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்