உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஜெர்மனியின் இளம் வீரர் ஸ்வெரேவ் கைப்பற்றினார். லண்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை, ஸ்வெரேவ் எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6க்கு4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார். இதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.டி.பி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ஜெர்மனி வீரர் என்ற சாதனையை ஸ்வெரேவ் படைத்தார்.