மகளிர் டி20 உலகக்கோப்பை - இந்தியா vs நியூசிலாந்து

மகளிர் டி20 உலகக்கோப்பை - இந்தியா vs நியூசிலாந்து
Published on
• மகளிர் டி20 உலககோப்பையில், இன்றைய போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில், ஷபாலி வர்மா (SHAFALI VERMA), ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்திரகர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அவர்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்திய அணி வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரை ஆரம்பிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com