மகளிர் பிரீமியர் லீக்- முதல் சதம் விளாசி நாட் ஷிவெர்-ப்ரண்ட் சாதனை
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் முதல் சதமடித்த வீராங்கனையாக, ஆல் ரவுண்டரான நாட் ஷிவெர் ப்ரண்ட் சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் சார்பில் அவர் விளையாடினார். பேட்டிங் செய்த அவர், ஒரு சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் சதம் கடந்து சாதனை படைத்தார்.
அவரது அதிரடியால் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story
