இன்று விம்பிள்டன் மகளிர் ஃபைனல் - மகுடம் சூடப்போவது யார்?
இன்று விம்பிள்டன் மகளிர் ஃபைனல் - மகுடம் சூடப்போவது யார்?
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர்ப் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணியளவில் லண்டனில் தொடங்கும் இறுதிப்போட்டியில் போலந்தைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை இஹா ஸ்வியாடெக்கும் Iga swiatek, அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவும் Amanda Anisimova சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இரு வீராங்கனைகளும் இதற்கு முன் விம்பிள்டன் பட்டத்தை வெல்லாதவர்கள் என்பதால், முதல் முறையாக மகுடம் சூடப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரகோஷத்துடன் ஜோகோவிச்சை கவுரவித்த ரசிகர்கள்
விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறிய ஜோகோவிச்சிற்கு djokovic கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் கவுரவித்தனர். 38 வயதாகும் செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச், தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறார். ஜோகோவிச்சின் 25வது கிராண்ட்ஸ்லாம் கனவு இம்முறையும் கைகூடவில்லை. அடுத்த விம்பிள்டன் தொடரில் பங்கேற்பேன் என ஜோகோவிச் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷத்துடன் ஜோகோவிச்சை வழியனுப்பி வைத்தனர்.
விம்பிள்டன் - ஜோகோவிச்சை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்த சின்னர்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி, இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் சின்னர் இறுதிப்போட்டிக்குள் கால்பதித்துள்ளார். லண்டனில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில், ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய சின்னர், 6க்கு 3, 6க்கு 3, 6க்கு 4 என்ற நேர் செட்களில் 7 முறை விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச்சை சாய்த்தார். இதன்மூலம், முதல் முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு சின்னர் முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் அல்கராஸுடன், நம்பர் ஒன் வீரரான சின்னர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
விம்பிள்டன் - ஃபைனலுக்கு முன்னேறி அல்கராஸ் அபாரம்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர வீரர் அல்கராஸ் alcaraz முன்னேறி உள்ளார். லண்டனில் நடந்த ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸை taylor fritz 6க்கு 4, 5க்கு 7, 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அல்கராஸ் கால்பதித்துள்ளார். தொடர்ச்சியாக 3வது முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அல்கராஸ், ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
டென்னிஸ் ஜாம்பவான்களை சந்தித்த கிரிக்கெட் ஜாம்பவான்
லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கண்டுகளித்துள்ளார். பிரபலமான சென்ட்டர் கோர்ட்டில் (Centre Court) டென்னிஸ் ஜாம்பவான்கள் ஜோர்ன் போர்க் Bjorn Borg மற்றும் ரோஜர் ஃபெடரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், இந்த மகிழ்வான தருணத்தை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
