விம்பிள்டன் - கலப்பு இரட்டையரில் வெர்பீக்-சினியக்கோவா இணை சாம்பியன்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர்ப் பிரிவில் நெதர்லாந்தின் செம் வெர்பீக் Sem Verbeek - செக் குடியரசின் சினியக்கோவா Siniakova இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. லண்டன் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரேசிலின் லூசியா ஸ்டெஃபானி Luisa Stefani - பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி Joe Salisbury இணையை 7க்கு 6, 7க்கு 6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெர்பீக் - சினியக்கோவா இணை அசத்தியது.
Next Story
