விம்பிள்டன் தொடர் - நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) தகுதி பெற்றுள்ளார். கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டனில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஃபிளாவியோ கோபோலியை (Flavio Cobolli) எதிர்கொண்டார். அதிரடியான ஆட்டத்தால், ஃபிளாவியோ கோபோலியை 6-க்கு 7, 6-க்கு2, 7-க்கு 5 மற்றும் 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதிக்கு நுழைந்தார். இதன் மூலம் அரையிறுதி சுற்றில் ஜோகோவிச்சும், இத்தாலி வீரர் ஜானிக் சின்னரும் (JANNIK SINNER) விளையாட உள்ளதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Next Story
