விம்பிள்டன் டென்னிஸ் : அல்கராஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

x

விம்பிள்டன் டென்னிசில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நோரியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய அல்கராஸ், இறுதியில் கேமரூன் நோரியை 6-க்கு 2, 6-க்கு 3, 6-க்கு 3 என்ற செட்களில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அல்கராஸ், தனது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிச் சாதனையை எட்டாவது முறையாக பதிவு செய்திருக்கிறார். அடுத்த சுற்றில் அவர் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்