விம்பிள்டன் - மகுடம் சூடினார் இஹா ஸ்வியாடெக்...
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை இஹா ஸ்வியாடெக் iga swiatek, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
லண்டன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தரவரிசையில் எட்டாம் இடத்தில் இருக்கும் போலந்து வீராங்கனை இஹா ஸ்வியாடெக்கும் iga swiatek, தரவரிசையில் 13ம் இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவும் amenda anisimova பலப்பரீட்சை நடத்தினர்.
போட்டியின் தொடக்கம், முதலே இஹாவின் கைதான் ஓங்கியது. முதல் செட்டில் அனிசிமோவாவை தனது அதிரடி ஆட்டத்தால் அலைக்கழித்த இஹா, 6க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து 2வது செட்டிலும் அதிரடியாக விளையாடி இஹா ஆதிக்கம் செலுத்த, மீண்டும் ஒரு புள்ளி கூட எடுக்க முடியாமல் அனிசிமோவா திணறினார்.
இறுதியில் ஒரு புள்ளியைக் கூட விட்டுக்கொடுக்காமல் 6க்கு பூஜ்யம் என்ற கணக்கில் 2வது செட்டை தன்வசப்படுத்திய இஹா, நேர் செட்களில் வெற்றி பெற்று விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக முத்தமிட்டார்
