விம்பிள்டன் - இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இஹா

x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு போலந்தைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை இஹா ஸ்வியாடெக் Iga swiatek முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிக்கை Belinda Bencic இஹா ஸ்வியாடெக் எதிர்கொண்டார். போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இஹா, 6க்கு 2, 6க்கு பூஜ்யம் என்ற நேர் செட்களில் சுலபமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நாளை ( 12ம் தேதி ) நடைபெறும் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா உடன் இஹா ஸ்வியாடெக், பலப்பரீட்சை நடத்தவுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்