"CSK அணியில் அடுத்த சீசன் விளையாடுவீங்களா?" - தோனி கூறிய பதில்
எப்போதும் மஞ்சள் ஜெர்சியில்தான் இருப்பேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறியுள்ளார். சென்னை அணியில் அடுத்த சீசன் தோனி விளையாடுவாரா என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தோனியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, தொடர்ந்து விளையாடுவேனா என்பது குறித்து முடிவெடுக்க அதிக நேரம் இருக்கிறது என்றார். தான் தொடர்ந்து விளையாடுவேனா இல்லையா என்பது வேறு விஷயம்... ஆனால் எப்போதும் மஞ்சள் ஜெர்சியைத்தான் அணிவேன் என்றும் தோனி தெரிவித்தார்.
Next Story
