மீண்டும் கேப்டனாகும் தோனி? - CSK அணியில் இன்று நடக்கப்போகும் பல மாற்றங்கள்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்து ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி கடுமையாக முயற்சிக்கக் கூடும். இன்றையப் போட்டியில் சென்னை அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டெல்லி அணி ஹாட்ரிக் வெற்றிக்கு இலக்கு வைத்து இன்றையப் போட்டியில் களமிறங்க உள்ளது.
Next Story
