தங்க ஜெர்ஸியில் களமிறங்கும் WI ஜாம்பவான்கள்

x

லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியினர் விளையாட உள்ளனர். இங்கிலாந்தில் world championships of legends கிரிக்கெட் தொடர் தொடங்கி உள்ளது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் கெயில், பொலார்டு, பிராவோ உள்ளிட்டோர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், 18 காரட் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்ட ஜெர்ஸியை அணிந்து இந்த தொடரில் விளையாடுகின்றனர். துபாயைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த ஜெர்ஸியின் அறிமுக விழாவும் நடைபெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்