அதிரடி காட்டப்போவது யார்? - பொறி பறக்க போகும் இன்றைய போட்டி
டி.என்.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் போட்டியில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ஐ-ட்ரீம் ( IDream ) திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதவுள்ளன. கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. பாபா அபரஜித் தலைமையில் களமிறங்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. சென்னை அணியில் விஜய் சங்கர், ஜெகதீசன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உள்ளனர். சாய் கிஷோர் தலைமையில் களமிறங்கும் திருப்பூர் அணியும் வெற்றியுடன் தொடரை தொடங்க தீவிரம் காட்டும் என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story
