என்ன நடந்தால் RCB முதலிடம் பிடிக்கும்? - லீக்கின் கடைசி போட்டியில் இப்படி ஒரு திருப்பமா?
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ ஏகனா மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்ட லக்னோ அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முனைப்பு காட்டும்... அதே சமயம், புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் பெங்களூரு, இன்று வெற்றி பெற்றால் குவாலிஃபயர்-1-ல் (QUALIFIER ONE) பஞ்சாப்பிற்கு எதிராக விளையாடுவதை உறுதி செய்யும். தோல்வி அடைந்தால் எலிமினேட்டர் போட்டியில் மும்பையுடன் பெங்களூரு விளையாட நேரிடும் என்பதால் இந்தப் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
