வரலாற்றிலே மிக மோசமான ரன்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ்
27 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் - ஆஸி. அபார வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் 27 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி வெஸ்ட் இண்டீஸ் மோசமான சாதனை படைத்துள்ளது.
ஜமைக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 225 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களும் எடுத்தன.
பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் 2வது இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது.
தொடர்ந்து, 204 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலிய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. நட்சத்திர பவுலர் ஸ்டார்க் starc, மிரட்டலாக பந்துவீசி விக்கெட் வேட்டை நிகழ்த்தினார்.
ஹேசில்வுட்டும் hazlewood நெருக்கடி தர வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் களத்திற்கும் பெவிலியனுக்கும் அணிவகுப்பு நடத்தினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய பவுலர் ஸ்காட் போலன்ட் scot boland ஹாட்ரிக் விக்கெட்டை சாய்க்க, வெறும் 27 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்-அவுட் ஆனது.
போட்டியில் 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட ஆஸ்திரேலியா, 3 டெஸ்ட்டிலும் வென்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் (whitewash )செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் 9 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதன் மூலம் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த 2வது அணி என்ற அவச்சாதனையையும் வெஸ்ட் இண்டீஸ் நிகழ்த்தியுள்ளது.
