மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
Published on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆண்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, நேற்று 2-ம் நாளில் ஆட்டத்தின்போது மேலும் 94 ரன்கள் சேர்த்து, 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 81 ரன்களும், ஜடேஜா 54 ரன்களும் எடுத்தனர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com