அடுத்த முறை சிறப்பாக விளையாட முயற்சிப்போம்" - CSG வீரர் விஜய் சங்கர் உறுதி
கண்டிப்பாக அடுத்த முறை சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். 2வது குவாலிஃபயர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இது குறித்து பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல் ரவுண்டர் விஜய் சங்கர்,
கண்டிப்பாக இதுவரை நடந்த ஒன்பது சீரியஸில் 4 முறை வெற்றி பெறுவது என்பது ஈஸியான விஷயம் இல்லை என்றும், தங்களுக்கு எல்லா கிரவுண்டிலும் அதிக அளவு சப்போர்ட் இருந்ததாகவும் கூறினார்
Next Story