ரசிகருக்கு பதிலடி கொடுத்த வார்னர்

நான்காவது அஷஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.
ரசிகருக்கு பதிலடி கொடுத்த வார்னர்
Published on
நான்காவது அஷஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே இரு நாட்டு வீரர்களும் களத்தில் வார்த்தை மோதல்களில் அதிகளவு ஈடுபடுவது உண்டு. தற்போது தங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் ஸ்மித், மற்றும் வார்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பியுள்ளனர். இவர்களை அவமானப்படுத்தும் செயல்களை இங்கிலாந்து ரசிகர்கள் தொடர்ச்சியாக செய்து வரும் நிலையில் போட்டி இடைவேளைக்கு பின் களமிறங்க வந்த வார்னரை இங்கிலாந்து ரசிகர் ஒருவர் ஏமாற்றுக்காரனே என்று கத்த வார்னர், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டு கைகளையும் உயர்த்தி நன்றி தெரிவிப்பது போல் சென்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com