"அடுத்த டார்கெட் 2027 உலகக்கோப்பை தான்"
2027ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டு இருப்பதை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உறுதி செய்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோலியிடம் அடுத்த திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, அடுத்த பெரிய முயற்சி குறித்து தற்போது தனக்கு தெரியவில்லை என்றும், அதே சமயம் 2027ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.
Next Story
