Virat Kohli | Temple | சச்சினின் சாதனையை முறியடித்த கையோடு விராட் கோலி செய்த செயல்
விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி சாமி தரிசனம் செய்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 போட்டிகளில் 2 சதம் ஒரு அரை சதம் என 302 ரன்கள் குவித்த கோலி, தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர் என்கிற சச்சினின் சாதனையையும் முறியடித்தார். இந்நிலையில், போட்டி முடிந்ததை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், கோலி சாமி தரிசனம் செய்தார்.
Next Story
