Virat Kohli New Record | Ind Vs Sa | ODI Cricket | சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை

x

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தொடர்ச்சியாக விராட் கோலி சதம் அடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளனர்... தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, 90 பந்துகளில் தனது 53வது ஒரு நாள் சதத்தை அடித்து அசத்தியுள்ளார். இது விராட் கோலியின் 84 ஆவது சதமாகும்.

தொடர்ந்து விராட் கோலி 11 முறை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ்களில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக நான்கு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக ஏழுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்