Virat Kohli | IND vs AUS |மாஸ் என்ட்ரி கொடுக்கும் கோலி, ரோகித்.. வெறிகொண்டு காத்திருக்கும் ரசிகர்கள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்குகின்றனர். டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவர்கள், 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் காணுகின்றனர். இந்த ஒருநாள் போட்டி காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவையும் பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், கோலி, ரோகித் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Next Story
